நாகர்கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா!
ADDED :4094 days ago
நாகர்கோவில் : ஆஞ்சயநேயர் ஜெயந்தி விழா வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுசீந்திரம் தாணுமாலையர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள் நடக்கிறது. மாலையில் தீபாராதனைக்கு பின்னர் மலர் முழுக்கு நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. கொட்டாரம் நந்தவனம் ஸ்ரீராமர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வரும் 20, 21 தேதிகளில் நடக்கிறது. 20-ம் தேதி காலை 5.15 மணிக்கு கணபதிஹோமத்துடன் விழா தொடங்குகிறது. 21-ம் தேதி காலை 5.15 மணிக்கு கலச பூஜையும், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து அலங்கார தீபராதனையும் நடக்கிறது.