உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை!

அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை!

திருவள்ளூர்: திருவள்ளூர் அய்யப்பா சேவா சமிதி சார்பில், சிவா - விஷ்ணு கோவிலில், திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவள்ளூர், பூங்கா நகரில் உள்ள சிவா - விஷ்ணு கோவிலின் அய்யப்பன் சன்னிதியில், நேற்று முன்தினம், திருவிளக்கு பூஜை நடந்தது. இதையடுத்து, காலை கணபதி ஹோமமும், பின், அய்யப்ப சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற்றது. மாலை, அய்யப்ப சுவாமி ஊர்வலம், சிவா - விஷ்ணு கோவிலிலிருந்து மாடவீதி, அப்பாசாமி சாலை, குழலை மலர் தெரு, துரைசாமி தெரு, மரியண்ணா தெரு வழியாக சென்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் படத்திற்கு முன், பெண்கள் திருவிளக்குகள் ஏந்தி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர். இரவு தாயம்பக நிகழ்ச்சியும், அய்யப்பா மங்களமுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !