உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துடியலூரில் அனுமன் ஜெயந்தி கோவில்களில் சிறப்பு வழிபாடு

துடியலூரில் அனுமன் ஜெயந்தி கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெ.நா.பாளையம் : துடியலுாரில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. துடியலுார், விஸ்வநாதபுரத்தில் உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஜெங்கமநாயக்கன்பாளையம் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் பன்னிருவகை அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.பெரியநாயக்கன்பாளை யம் மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர், துளசி மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய செயலாளர் சுவாமி அபிராமானந்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.இதே போல, பெரியநாயக்கன்பாளையம் யூனியன் டாங்க் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர், காளிபாளையம் திருமலைராயர் பெருமாள் கோவில், நாயக்கனுார் நரசிங்க பெருமாள் கோவில், பாலமலை ஆஞ்சநேயர் கோவில், இடிகரை பள்ளி கொண்ட ரங்கநாதர் கோவில் வளாகங்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !