உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் திருப்படி திருவிழா: ஆலோசனை கூட்டம்!

திருத்தணி முருகன் திருப்படி திருவிழா: ஆலோசனை கூட்டம்!

திருத்தணி: திருத்தணி முருகன்  கோவிலில், வரும் 31ம் தேதி, திருப்படித் திருவிழா, புத்தாண்டு தரிசன  விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை  வசதிகள் குறித்து அதிகாரிகளின்  ஆலோசனை கூட்டம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில், 31ம் தேதி,  திருப்படித் திருவிழாவும், ஜன., 1ம் ÷ ததி புத்தாண்டு சிறப்பு தரிசனம் போன்ற  விழாக்கள் நடைபெறுகிறது.  இதில் கலந்து கொள்ள, தமிழகம் உட்பட பல்வேறு  மாநிலங்களில் இருந்து  லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு  வந்து மூலவரை தரிசிப்பர்.  பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்  மற்றும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்,  திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பாண்டியன்  தலைமையில் நேற்று  திருத்தணியில் நடந்தது.

கோவில் இணை ஆணையர் புகழேந்தி வரவேற்றார். இதில்,  அரக்கோணம் எம்.பி., அரி கலந்து கொண்டு, அனைத்து துறை அதிகாரிகளிடத்தில்,    இந்த விழாவிற்கு என்னென்ன முன் ஏற்பாடுகள் செய்து வருகிறீர்கள், என்ன செய்ய  வேண்டும் என, கேட்டறிந்தார். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு குறித்தும்,  மலைக்கோவிலில் பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசிப்பதற்கு என்ன ஏற்பாடுகள்  செய் துள்ளீர்கள் எனவும் எம்.பி., கேட்டறிந்தார். மின்சாரம், போக்குவரத்து,  சுகாதாரம், பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை, தீயணைப்பு, நகராட்சி,  ஊராட்சி  ஒன்றி யம் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும்  கூட்டத்தில், கர்மன்ற தலைவர் சவுந்தர்ராஜன், ஒன்றிய ÷ சர் மன் ரவி,  உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !