ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
ADDED :3991 days ago
லாலாபேட்டை : லாலாபேட்டை அடுத்துள்ள கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையும், 108 சங்காபிஷேகம், மலர்கள் கொண்டு புஷ்பாபிஷேகம் உட்பட பல சிறப்பு பூஜை செய்து, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், லாலாபேட்டை, குளித்தலை, வல்லம், கரூர், புலியூர், உட்பட பலர் பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் செய்தனர்.