புகழிமலையில் கிருத்திகை விழா
ADDED :4028 days ago
வேலாயுதம்பாளையம்: புகழிமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் மார்கழி மாத கிருத்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு உச்சி கணபதி, பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு, சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதணை நடந்தது.நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி வழிபாடு செய்தனர். புன்னம் பாலமலை முருகன் கோவில், வெண்ணமலை பாலசுப்பிரமணிய ஸ்வாமி, வேலாயுதம்பாளையம் ஐயப்பன், செந்தில் ஆண்டவர் ஸ்வாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.