புதுச்சேரி குருபூஜை விழா!
ADDED :3934 days ago
புதுச்சேரி: வைத்திக்குப்பம் குரு அக்காசாமி கோவிலில், பிரதான சீடர் நாராயணசாமியின் 110வது குருபூஜை விழா நடந்தது.
இதை முன்னிட்டு, காலை 8.00 மணிக்கு கணபதி பூஜையும், 9.00 மணிக்கு சீடர் நாராயணசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. பகல் 12.00 மணிக்கு அன்ன சேவை நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை ஆணையர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.