உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னியர்களின் ஊடுருவலை தடுக்க நெல்லையப்பர் கோயிலில் யாகம்!

அன்னியர்களின் ஊடுருவலை தடுக்க நெல்லையப்பர் கோயிலில் யாகம்!

திருநெல்வேலி : இந்தியாவிற்கு அன்னிய நாடுகளால் ஆபத்து வராமல் தடுப்பதற்காகவும், உலகநன்மைக்காகவும் நெல்லையப்பர் கோயிலில் ம்ருத்யுஞ்சய ஜபவேள்வி நடத்தப்பட்டது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் இந்து ஆலய பாதுகாப்பு பேரவை மற்றும் பக்தர்கள் பேரவை சார்பில் ம்ருத்யுஞ்ஜய ஜபவேள்வி நடத்தப்படுகிறது.

உலகநன்மைக்காகவும், மழைபொழிந்து விவசாயப்பணிகள் செழிப்பதற்காகவும், சமீபகாலமாக நிலவும் அன்னிய சக்திகளின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியா விடுபடுவதற்காகவும் இந்த வேள்வி நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் கோயில் சன்னதியில் 14வது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வேள்வியை வேதவிற்பன்னர்கள், கோயில் சிவாச்சாரியார்கள் இணைந்து நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஆலய பாதுகாப்பு குழுவினர் சார்பில் ஆன்மிக ஊர்வலம் நடந்தது.

இதில் பல்வேறு இந்துமத அமைப்புகளின் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் பங்கேற்றனர். சிறுவர்,சிறுமியர்கள் பல்வேறு ஆன்மிக தலைவர்களின் வேடங்கள் புனைந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !