உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயில் தைப்பூசம்: ஜன.,25ல் துவக்கம்

நெல்லையப்பர் கோயில் தைப்பூசம்: ஜன.,25ல் துவக்கம்

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா வரும் 25ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் தைப்பூசத்திருவிழா வரும் 25ம் தேதி காலை 7.32 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 28ம் தேதி பகலில் திருநெல்வேலி ஸ்தலபுராணம் உருவான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நடக்கிறது. இரவில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி,அம்பாள் வீதியுலா நடக்கிறது.பிப்ரவரி 3ம்தேதி திருநெல்வேலி கைலாசபுரம் தாமிரபரணி தைப்பூச மண்டபத்தில் பகலில் தீர்த்தவாரி நடக்கிறது. 4ம் தேதி இரவில் நெல்லையப்பர் கோயில் சவுந்தர சபா மண்டபத்தில் நடராஜரின் நடனகாட்சி நடக்கிறது. 5ம் தேதி இரவில் நெல்லையப்பர்கோயில் வெளித்தெப்பத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !