அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4281 days ago
புதுச்சேரி: அங்காளம்மன் கோவி லில் தை அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, மாலை சிறப்பு பூஜை, இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் தலைமையில் செய்திருந்தனர்.