உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவம் துவக்கம்!

சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவம் துவக்கம்!

திட்டக்குடி: திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில்  தைப்பூச பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி யது. அதனையொட்டி நேற்று அதிகாலை அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. கும்பகோணம் சவுந்தர்ராஜன் பட்டாச்சாரியார், திட்டக்குடி ஸ்ரீதர்  பட்டாச்சாரியார் பூஜைகளை செய்தனர். காலை 6 மணிக்கு தைப்பூச பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ராஜபி ரதாபன், பரமகுரு, பன்னீர்செல்வம், வேணுகோபால், பாலகிருஷ்ணன், பத்மநாபன் மற்றும் சுகாசன பெருமாள் சேவா சங்கத்தினர் உட்பட பலர்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !