கைலாசநாதர் கோவிலில் பாலஸ்தாபன பூஜை!
ADDED :3908 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் புதுப்பிக்கும் பணிக்காக பாலஸ்தாபன பூஜை நடந் தது. விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி கிராமத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலை புநுப்பிக்க மக்கள் முடிவு செய்தனர். நேற்று காலை 9 மணிக்கு சிவநேய செல்வர் புதுச்சேரி சிவராம கிருஷ்ண அடிகளார் தலைமையில் சிவனடியார்கள் திருமுறைகள் ஓதி சிறப்பு பூஜைகள் செய்து சுவாமியை பழைய இடத்திலிருந்து புதிய இடத்தில் பால ஸ்தாபனம் செய்தனர். சிறப்பு பூஜைகளை சிவ நேய செல்வர்கள் சிவராஜா, சிவசரவணன் செய்து வருகின்றனர்.