பொன்மலை வேலாயுதசாமி உற்சவர் திருவீதி உலா
கிணத்துக்கடவு: பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச தேரோட்டத்தை ஒட்டி திருவீதி உலா நடந்தது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி சஷ்டி குழுவினர், 35ம் ஆண்டு பாதயாத்திரையை முன்னிட்டு, சஷ்டி குழுவினர் மார்கழி மாதம் முதல் மாலை அணிந்து விரமிருந்து வேலாயுதசாமியை வழிபட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச தேரோட்டத்தை ஒட்டி திருவீதி உலா நடந்தது. முன்னதாக மூலவர் வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ராஜா அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், வேலாயுதசாமி உற்வச மூர்த்தியை மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்து, அங்கு, சஷ்டி குழுவினரின் வேல் வைத்து, அதற்கு, சிறப்பு யாக பூஜை செய்து வழிபட்டனர். பின், திருவீதி உலாவுடன் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கிரிவலத்தை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ணன் மன்றாடியார் துவக்கி வைத்தார். இன்று காலை, 5:00 மணிக்கு வேலாயுதசாமிக்கு சிறப்பு அபி?ஷக அலங்கார பூஜை செய்து வழிபட்டு, பின் மலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையை துவக்குகின்றனர். இக்குழுவினர் வரும் பிப். 3ம் தேதியன்று பழநி மலை சென்று, பாலதண்டாயுதபாணியை வழிபடுகின்றனர். ஏற்பாடுகளை, சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சஷ்டி குழுவினர் செய்து வருகின்றனர்.