வயலூர் கோவிலில் 5ம் தேதி தைப்பூசம்!
ADDED :3915 days ago
திருச்சி: வயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் வரும், 5ம் தேதி தைப்பூச
திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடக்கிறது.திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வயலூரில் பிரசித்தி பெற்ற சுப்பிர மணிய ஸ்வாமி கோவில் உள்ளது. நடப்பாண்டுக்கான தைப்பூசத்திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 5ம் தேதி அதிகாலை, சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து மதியம், 12 மணிக்கு உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு, 7 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் மஹா தீபாராதனை நடக்கிறது.தைப்பூச திருவிழாவையொட்டி வரும், 3 ம்தேதி முதல் திருச்சி மாநகரின் பல பகுதிகளில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.