திருமலையில் இலவச முகமூடி வழங்க பக்தர்கள் கோரிக்கை!
ADDED :4060 days ago
திருப்பதி: திருமலையில், பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில், இலவச முகமூடி வழங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேலும், கடந்த வாரம் முதல், பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறி திருப்பதியில் தென்பட்டு வருகிறது; பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். திருமலை மற்றும் திருச்சானூருக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இலவசமாக முகமூடி வழங்கினால் வசதியாக இருக்கும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.