கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4093 days ago
கடலூர் புதுப்பாளையம் கெங்கையம்மன் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கடலூர், புதுப்பாளையம் அருணகிரி தெருவில் உள்ள கெங்கையம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்கான விழா கடந்த 6ம் தேதி காலை மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை, யாத்ராதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9.30மணிக்கு பாலவிநாயகர், பாலமுருகன், தட்சிணா மூர்த்தி, காத்தவராயன், ஜலதுர்கை மற்றும் கெங்கையம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.