உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் சிவராத்திரி துவக்கம்!

ராமேஸ்வரத்தில் சிவராத்திரி துவக்கம்!

ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரி திருவிழா, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, கோயிலில் சுவாமி முன்புள்ள நந்தி மண்டப கொடி கம்பத்தில், மந்திரம் முழங்க, குருக்கள் ஸ்ரீராம் திருவிழா கொடி ஏற்றினார்.

கோயில் தக்கார் குமரன் சேதுபதி, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி,கோயிலில் தொடர்ந்து 12 நாட்கள் சுவாமியும், அம்மனும் தங்கம், வெள்ளி வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !