உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் சாய்பாபா சிலை பிரதிஷ்டை!

திருவாரூர் சாய்பாபா சிலை பிரதிஷ்டை!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில், சீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய்பாபா சக்தி பீடம் சார்பில், 2 கோடி ரூபாய் செலவில், புதிய கோவில் கட்ட இடம் தேர்வு செய்து, கடந்த வாரம் பூமி பூஜை நடந்தது.

ஜெய்ப்பூரில் மார்பிள் கல்லில், 5 அடி, 9 அங்குலத்தில், 8.50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சாய்பாபா சிலையை, சீரடிக்கு எடுத்துச் சென்று பூஜித்து, நேற்று காலை திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூருக்குக் கொண்டு வந்தனர். அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, பன்னீர், சந்தனம் மற்றும் பால் அபிஷேகம் செய்து பிரதிஷ்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !