உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவிலில் 17ம் தேதி மகா சிவராத்திரி!

ஷீரடி சாய்பாபா கோவிலில் 17ம் தேதி மகா சிவராத்திரி!

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலில், வரும், 17ம் தேதி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அகண்ட நாம ஹோமம் நடைபெறுகிறது.

திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் பகுதியில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது.
இக்கோவிலில், வரும் 17ம் தேதி, மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, காலை, 8:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் அமைத்து அகண்ட நாம ஹோம பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மூலவருக்கு, 108 குடம் பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !