உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயமாநகரம் கோவிலில் 18ம் தேதி மயானக்கொள்ளை!

விஜயமாநகரம் கோவிலில் 18ம் தேதி மயானக்கொள்ளை!

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு கடந்த 8ம் தேதி நள்ளிரவு 12:00 மணியளவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.  நேற்று (11ம் தேதி) காலை 7:00 மணிக்கு அம்ம னுக்கு சிறப்பு பூஜை, பகல் 11:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜை, பகல் 11:00 மணிக்கு  அம்மன் விதியுலா, நாளை (13ம் தேதி) மாலை 4:00 மணியளவில் திருவிளக்கு பூஜை, 17ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. வரும் 18ம் தேதி காலை  7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணிக்கு மயானக் கொள்ளை திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !