அலகு குத்தி காரை இழுத்த சென்னை பக்தர்கள்!
ADDED :3924 days ago
பழநி : சென்னையை சேர்ந்த மூன்று பக்தர்கள் அலகுகுத்தி "காரை இழுத்து பழநிமலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தென்பழநி திருப்பாதயாத்திரை குழுவை சேர்ந்த 50 பேர் ஜன.,27ல் பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு புறப்பட்டனர். நேற்று சண்முகநதியில் 20பேர் மொட்டை எடுத்து உடலில் நூற்றுக்கு மேற்பட்ட அலகுகள் குத்தி வந்தனர். அதில் கந்தசாமி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் உடல்முழுவதும் அலகு குத்தி அதனை காருடன் இணைத்து இழுத்து வந்தனர். பெரியநாயகியம்மன் கோயில், பஸ் ஸ்டாண்ட் அடிவாரம் ரோடு வழியாக திருஆவினன்குடி கோயில் வரை காரை இழுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.