கோவிலில் சிறப்பு வழிபாடு!
ADDED :3986 days ago
அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு சீதேவி, பூதேவி சமேத வரதாரஜ பெருமாளுக்கு 108 கலாசபிஷேகம் நடந்தது. விஷ்ணுபதி புண்ணியகால சிறப்பு வழிபாடும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சீதேவி. பூதேவி சமேத வரதாரஜ பெருமாள் அருள்பாலித்தார்.