உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை கொடியேற்றம்!

அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை கொடியேற்றம்!

பண்ருட்டி: பண்ருட்டி அங்காளம்மன் கோவிலில் 75வது ஆண்டு பிரம்மோற்சவ விழா மயான கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி யது. பண்ருட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது. நேற்று  முன்தினம் (15ம் தேதி) காலை 10:30 மணிக்கு கெடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு பூவாலக்கப்பரை  வீதியுலா நடந்தது. இன்று 17ம் தேதி மாலை ரணகளிப்பு, 18ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 1:30 மணிக்கு மய õனக் கொள்ளை திருவிழாவும், 19ம் தேதி உற்சவர் சுவாமிக்கு திருக்கல்யாணமும், 20ம் தேதி  மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !