ஏகநாயகர் கோவிலில் மகா சிவராத்திரி பூஜை!
ADDED :3927 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் ஏகநாயகர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை இன்று நடக்கிறது. மகா சிவராத்திரியையொட்டி, பெண்ணாடம் சாலையிலுள்ள ஏகநாயகர் கோவிலில் இன்று இரவு நான்கு கால பூஜை நடக்கிறது. அதில், மாலை 6:30 மணி முதல் அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. இரவு 9:00 மணியளவில் முதல் கால சிவராத்திரி சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து நான்கு காலமும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நான்காம் காலத்தில் பஞ்சமுக அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, பஞ்சமுக தீப ஆராதனை நடக்கிறது.