ப்ரபஞ்ச அமைதி ஆன்மிக சங்கம் சார்பில் சிவராத்திரி விழா
ADDED :3997 days ago
திண்டிவனம்: சுப்ரபஞ்ச அமைதி மற்றும் ஆன்மிக சங்கம் சார்பில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. செஞ்சி தாசில்தார் ஜெயக் குமார் தலைமை தாங்கினார். சுப்ரபஞ்ச அமைதி மற்றும் ஆன்மிக சங்க நிறுவனர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சங்க நிறுவனர் ரமேஷ், தாசில்தாருக்கு ஆன்மிக அனுபவக் கல்வி குறித்த ஆய்வு நுõல்களை வழங்கி, எதிர்கால சேவைகள் குறித்து பேசினார். ஆசிரியர் ஏழுமலை உடன் இருந்தார்.