கூடலுார் மாதேஸ்வரர் கோவில் திருவிழா
ADDED :3862 days ago
கூடலுார் : கூடலுார், நந்தட்டி மாதேஸ்வரர் கோவில் திருவிழா, படுகர் மற்றும் ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நடனத்துடன் சிறப்பாக நடந்தது. கூடலுார் நந்தட்டி மாதேஸ்வரர் கோவில் ஆண்டு திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நிகழ்ச்சிகள் நடந்தன. 10ம் தேதி காலை, 5:30 மணிக்கு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தன. இரவு 8:30 மணிக்கு வானவேடிக்கைகள், இசை நிகிழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 10:00 மணியுடன் விழா நிறைவடைந்தது. திருவிழாவை முன்னிட்டு, படுகர் மக்களும், ஆதிவாசி மக்களும் குடும்பத்துடன் தங்கி, தங்கள் பாரம்பரிய இசையுடன் நடனமாடி திருவிழாவை கொண்டாடினர்.