உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் யுகாதி விழா!

கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் யுகாதி விழா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி காலை  7:00 மனைகு அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5: 00 மனைகு மூலவர் அம்மனுக்கு அனைத்து வகை  பழங்களால் சிறப்பு அலங் காரம் செய்து,  தீபாராதனை நடந்தது. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. உற்சவர் அம்மன் சிறப்பு அலங் காரத்தில் சிம்மவாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வாசவி கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !