வெங்கட்ரமணர் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :3966 days ago
செஞ்சி: செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் மழை வேண்டி 500 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.காலை 9 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பகல் 10 மணிக்கு திருவிளக்கு பூஜை துவங்கியது. பூஜைகளை ராதாகிருஷ்ணன், குமார் பட்டாச்சாரியார்கள் நடத்தினர். பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் பூபதி, செயலாளர் ஸ்ரீபதி, தொழிலதிபர் கோபிநாத், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் அரங்க ஏழுமலை, வழக்கறிஞர் வைகைதமிழ், என்.ஆர். பேட்டை முன்னாள் தலைவர் ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.