பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா சம்ப்ரோஷணம்!
ADDED :3900 days ago
செஞ்சி: செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டியில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவில் மகா சம்ப்ரோஷணம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 21ம் தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 7.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 7.50 மணிக்கு மகா சம்ப்ரோஷணமும் நடந்தது. சுதர்சன பாகவதர் தலைமையிலான பாகவதர்கள் பூஜைகளை செய்தனர். ஊராட்சி தலைவர் தட்சணாமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் ராஜகோபால், முன்னாள் கவுன்சிலர் பச்சையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.