கொளஞ்சியப்பருக்கு 2.5 கிலோ எடையில் தங்க கிரீடம்!
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் சுவாமிக்கு, அமெரிக்க நாட்டை சேர்ந்தவர், இரண்டரை கிலோ எடையில் தங்க கிரீடம் காணிக்கைய õக அளித்துள்ளார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணவாளநல்லுாரில், சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கொளஞ்சியப்பர் சுவாமிக்கு, அமெரிக்கா டாக்டர் கிரீஸ் யோகம் என்பவர், 2 கிலோ 550 கிராம் எடையில் 96 லட்சம் ரூபாய் மதி ப்பில் தங்க கிரீடம் மற்றும் கவசத்தை காணிக்கையாக செலுத்தினார். கிருத்திகை தினமான நேற்று, தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டு, கொளஞ்சியப்பர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக சுவாமிக்கு, பால், தயிர், சந்தனம், இளநீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமிக்கும், வேடப்பர் கோவில் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ராஜ அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.