வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர விழா துவங்கியது!
ADDED :3849 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 75ம் ஆண்டு பங்குனி உத்திர விழா நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். சுவாமிக்கு தினமும் பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் தினமும் இரவு நடக்கிறது. ஏப்., 3 ல் பக்தர்கள் காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மண்டபம் கதிர்காம சக்தி வடிவேல் முருகன் , காந்தி நகர் சண்முக சடாச்சர முருகன் , மறவர் தெரு சித்தி விநாயகர் முருகன் , இடையர்வலசை முருகன், வளநாடு கருப்பபிள்ளை மடம் சுப்ரமணியசுவாமி கோயில்களில் பங்குனி உத்திர விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இக்கோயில்களில் ஏப்., 3ல் பங்குனி உத்திர விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.