உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டாபிராமர் கோவிலில் ராமநவமி விழா

பட்டாபிராமர் கோவிலில் ராமநவமி விழா

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வெங்கட்டம்பட்டி பட்டாபிராமர் கோவிலில் ராமநவமி விழா இன்று துவங்கி, 31ம் தேதிவரை நடக்கிறது. விழாவையொட்டி, இன்று காலை, 10.30 மணிக்கு சிறப்பு ஹோமம் பட்டாபி ராமருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. நாளை காலை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், 10 மணிக்கு மேல், 11.30 மணிக்கு சீதா ராம திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 9 மணிக்கு கலை நிகழ்ச்கி நடக்கிறது. வரும், 30ம் தேதி சிறப்பு அபிஷேகம், பூஜைகளும், இரவு, 9 மணிக்கு சீதா ராம சீனிவாச பெருமாள் அவதார காட்சி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா கரகாட்டம், வாணவேடிக்கை நடக்கிறது. 31ம் தேதி காலை, 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், முளைப்பு பூஜையும், 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !