விளாச்சேரி ராமர் கோயிலில் ராம நவமி விழா!
ADDED :3958 days ago
திருப்பரங்குன்றம் : ராமநவமியை முன்னிட்டு, விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் தொடர் ராம நாம ஜபம் முடிந்து பட்டாபிஷேக ராமர், சீதை, லட்சுமணனுக்கு சந்தன காப்பு அலங்காரமாகி, பூஜைகள் நடந்தன சுரேந்திர சர்மா, சங்கர் சர்மாவின் பக்தி சொற்பொழிவு நடந்தது. நிர்வாகிகள் மரகதவல்லி, கண்ணன், சிவராமன் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயில், திருநகர் சித்தி விநாயகர் கோயிலிலும் விழா நடந்தது.