சீலக்காரி அம்மன் கோயில் பங்குனி விழா!
ADDED :3841 days ago
முதுகுளத்தூர்:
சித்திரங்குடி விஸ்வகர்மா உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சீலக்காரி அம்மன்
கோயில் பங்குனி களரி விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு நாளை
(ஏப்.,3) இரவு 11 மணிக்கு ஆற்றில் இருந்து பூஜை பெட்டி தூக்கி
வரப்படுகிறது. ஏப்., 4 காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,
பூஜைகள் நடைபெறு கின்றன. ஏப்., 5 காலை 7.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல்
வைத்து புஷ்ப அலங்கார பூஜைகள் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கோயில் தலைவர்
வேலு, விழா குழுவினர் செய்துள்ளனர்.