வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம்!
ADDED :3836 days ago
காளையார்கோவில் : கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கொல்லங்குடி அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 108 சங்காபிஷேகம், பால்குடம் எடுத்தல் நடந்தது. பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேர்த்திகடன் செலுத்திவருகிறார்கள். திருவிழா வின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் வலம் வந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் தேரில் எழுந்தருளினார். காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபேற்றது. இன்று தீர்த்தவாரியுடன் மலர் பல்லக்கில் திருவீதி உலா , விடையாற்றி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.