உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப லட்சார்ச்சனை!

ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப லட்சார்ச்சனை!

விழுப்புரம்: விழுப்புரத்தில், ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில், லட்சதீப லட்சார்ச்சனை மகோற்சவ விழா துவங்கியது. விழுப்புரம், தேவநாதசுவாமி  நகரிலுள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில், லட்சதீப லட்சார்ச்சனை மகோற்சவம் நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு  சுப்ரபாதம், 6:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், 7:00 மணிக்கு ஏகதினலட்சார்ச்சனை, இரவு 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.  இதனை  தொடர்ந்து, இன்று (13ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பழகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (14ம்  தேதி) மாலை 6:00 மணிக்கு லட்சதீபம் மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !