புனித தோமையார் தேரோட்டம்
ADDED :3828 days ago
மணப்பாறை:மணப்பாறை அருகே உள்ள மலையடிப்பட்டியில், 129 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித தோமையார் தேவாலயம், மலையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பாஸ்கா திருவிழாவின் போது, பெரியதேரோட்டம் வெகுசிறப்பாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு 6ம் தேதி, திருச்சி கலைக்காவிரி தொடர்பகம் இயக்குனர் அடைக்கலராஜ், திருப்பலி நிறைவேற்றி தூய தோமையார், திருக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, 11ம் தேதி இரவு தூய தோமையார் ரதம் தோமையார் மலையில் இருந்து, கீழே கொண்டு வரப்பட்டு, மலையடிப்பட்டி நடுவீதியில் உயிர்த்த ஆண்டவர், தூய தோமையார் சந்திப்பு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை புத்தாநத்தம் பங்குதந்தை சேசுராஜ் ஆசிர்வதித்து துவக்கிவைத்தார்.