உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப ஆராதனை விழா!

ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப ஆராதனை விழா!

தியாகதுருகம்: தியாகதுருகம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப ஆராதனை விழா நடந்தது. தியாகதுருகம் சீனுவாச பெருமாள் கோவில் வளாகத்தில்  உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்சதீப ஆராதனை நடந்தது. மூலவர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு செய்து மலர், வெற்றிலை  மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சமுதாய பராமரிப்பு கமிட்டி  தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, வெஜங்கடாஜலபதி, பிச்சாண்டிபிள்ளை, ரங்கராஜிலு, வைத்தியநாதன், ஜெயபிரகாஷ், ராதாகிருஷ்ணன்,  அபரஞ்சி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !