சித்திரை அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்!
ADDED :4131 days ago
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, கோயிலில் தரிசனம் செய்தனர். சித்திரை அமாவாசையை முன்னிட்டு வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். அதிகாலையில், அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி, புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்து, வழிபட்டனர். பின், அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி விட்டு, திருக்கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களை வரிசையில் நின்று நீராடினார்கள். பின், கோயில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், கோயில் ஊழியர்கள் செய்திருந்தார்.