திருமணத்தில் இனிப்புகளை சீர் பலகாரமாகக் கொடுப்பது ஏன்?
ADDED :3923 days ago
திருமண வைபவத்தில் மணமகள் சார்பில் லட்டு, பூந்தி போன்ற இனிப்புகளை சீர் பலகாரமாகக் கொடுப்பர். அவரவர் வசதிக்கேற்ப லட்டின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். இப்படி கொடுப்பது ஏன் தெரியுமா? இனிப்பு வகைகளில் லட்சுமிக்கு விருப்பம் அதிகம். அவளின் அருளால் மண வாழ்வு சிறக்கவும், மாப்பிள்ளை வீட்டாருக்கு லட்டு போல புதிய உறவு என்றும் இனிக்கவும் கொடுக்கிறார்கள்.