நாளெல்லாம் நன்மை தரும் வில்வ மரம்!
ADDED :3855 days ago
வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்வதாக அஷ்டோத்திரமந்திரம் கூறுகிறது. இதற்குஸ்ரீ விருட்சம் என்றும் பெயருண்டு. வில்வ மரப்பலகையில் யந்திரம் வரைந்து லட்சுமியை வழிபடுவது சிறந்த பலன் தரும். வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணிய உண்டாகும். வில்வ கன்றுகளை பிறருக்கு தானம் அளிப்பதும் புனிதமானதாகும். வீட்டின் முன் புறபகுதியில் வில்வ மரத்தை வளர்ப்பது நல்லது. காலையில் எழுந்ததும் இதனை தரிசித்தால் நாளெல்லாம் நல்லதாக இருக்கும்.