உலகளந்த பெருமாள் கோவிலில் தேகளீச பெருமாள் கருடசேவை!
ADDED :3848 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், அட்சய திருதியை முன்னிட்டு தேகளீச பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதியுலாநடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று அட்சயதிருதியை சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6:30 மணிக்கு, ஸ்ரீ தேகளீச பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினார்.முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, சுவாமி கோவிலை அடைந்தது.
ராமர் சன்னதியில் சீதாலஷ்மண அனுமந்த சமேத ராமச்சந்திரமூர்த்திக்கு, ராமானுஜருடன் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், நாலாயிர திவ்யபிரபந்த சேவை சாற்றுமறை நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள்தலைமையில் நடந்தஇவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.