உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் உண்டியல் காணிக்கை!

கோவில்களில் உண்டியல் காணிக்கை!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில்; கடம்பாடி, மாரி சின்னம்மன்
கோவில் ஆகியவற்றில், முறையே, 2.53 லட்சம் ரூபாய்; 2.73 லட்சம் ரூபாய், உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது.

இக்கோவில்களில், நேற்று முன்தினம், துணை ஆணையர் தனபாலன், ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. ஸ்தலசயன பெருமாள் கோவிலில், கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதல், நேற்று முன் தினம் வரை, 2,53,262 ரூபாய்; 20 கிராம் தங்கம்; 123 கிராம் வெள்ளி ஆகியவை, காணிக்கையாக கிடைத்துள்ளது.மாரி சின்னம்மன் கோவிலில், கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, 2,73,122 ரூபாய்; 13 கிராம் தங்கம்; 36 கிராம் வெள்ளி ஆகியவை, காணிக்கையாக கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !