திருப்புல்லாணி கோயிலில் ஆதி ஜெகநாதர் வீதிஉலா!
ADDED :3857 days ago
கீழக்கரை : அட்சய திருதியை தினமான நேற்று, திருப்புல்லாணி கோயிலில் ஆதி ஜெகநாதர் 4
ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் கோயிலுக்கு அட்சய திருதியை தினமான நேற்று
அதிகாலை ஏராளமான பக்தர்கள் வந்தனர். காலை 8 மணியளவில் கல்யாண
ஜெகந்நாதப்பெருமாள் கருட வாகனத்தில் நான்கு ரதவீதிகளில் வீதியுலா வந்தார். பின்னர்
உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் நடந்தது.
ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம், பேஷ்கார் கண்ணன்
செய்திருந்தனர். பின்னர் ஆண்டவன் ஆசிரமத்திலுள்ள ஹயக்ரீவப்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நிறைவேற்றப்பட்டு,லட்சுமி நாணயம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.