உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகாம்பாள் கோவில் பிரம்மோற்சவ விழா!

ரேணுகாம்பாள் கோவில் பிரம்மோற்சவ விழா!

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் அம்மன் கோவில் பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். அன்று இரவு பூ பல்லக்கில் சாமி வீதியுலா நடந்தது. நேற்று இரண்டாம் நாள் திருவிழா நடந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் வரும் மே 1ம் தேதி நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை சிறுகடம்பூர் பகுதி பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !