சிதம்பரம் நடராஜர் கோவிலில் யாகசாலை பூஜை இன்று துவக்கம்!
ADDED :3922 days ago
சிதம்பரம்: நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகிறது.
சிதம்பரம், நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 1ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு, பூர்வாங்க பூஜைகள், கடந்த 22ம் தேதி துவங்கியது.
கடந்த 2 நாட்களாக நவக்கிரக ஹோமம் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று நடந்த பூர்வாங்க பூஜையில், ஹோம குண்டத்திற்கு புற்றுமண் எடுக்கும் பூஜை, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தீட்சிதர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில், முதல்கால பூஜை இன்று மாலை நடக்கிறது. தினமும் இரண்டுகால பூஜை என, 30ம் தேதி வரை, 12 கால பூஜைகள் நடக்கிறது.