உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

திருவள்ளூர்: திருவள்ளூர், நாகாத்தம்மன் கோவிலில்,  சித்ரா பவுர்ணமி மற்றும் முதலாண்டு, தீ மிதி திருவிழா,  மே 1ம் தேதி முதல், 3ம் தேதி வரை,  நடைபெறுகிறது. திருவள்ளூர், காந்திபுரம் ஆயில் மில் அருகே உள்ள உலகாளும் நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா மே 1ம் தேதி, காலை   6:30  மணிக்கு மகா அபிஷேகம்,   காலை 8:00 மணிக்கு  கொடியேற்றுதல் மற்றும் பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.  மறுநாள், மே  2ம் தேதி,  காலை  7:30 மணிக்கு, உலகாளும் நாகாத்தம்மனுக்கு மகா அபிஷேகமும்,  மாலை  4:30  மணிக்கு வெற்றி விநாயகர் கோவிலிலிருந்து பக்தர்கள்  அலகு தரித்து தீச்சட்டி எடுத்து ஊர்வலமும், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனையும் நடைபெறும். மூன்றாம் நாளான,  மே 3ம்  தேதி, காலை 8:30  மணிக்கு, நாகாத்தம்மனுக்கு அபிஷேகமும், காலை  9:30 மணிக்கு மேல் பம்பை உடுக்கை  அம்மன் வர்ணித்தலும், மதியம் 12:00  மணிக்கு அலகு பானை எடுத்து வருதலும் நடைபெறும்.  அன்று, மதியம் 2:00 மணிக்கு  அக்னி குண்டம் மூட்டப்பட்டு, மாலை 4:30  மணிக்கு தீமிதி திருவிழா நடைபெறும்.   இரவு  அம்மன் வீதியுலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !