உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம்!

தீவனூர் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம்!

திண்டிவனம்: தீவனூர் விநாயகருக்கு 1008 பால்குட அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர்  சுயம்பு பொய்யா மொழி விநாயகர் ÷ காவிலில், கடந்த  23ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும்  சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 7  வது நாள் உற்சவத்தை முன்னிட்டு மூலவருக்கு  அதிகாலை மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து  புதுச் சேரி சிவன் கோவில் குருக்கள் குழுவினரால் கணபதி ஹோமம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, கோவிலில் இருந்து உற்சவமூர்த்தி சிறப்பு  அலங்காரத்துடன், 1008 பால்குட ஊர்வலத்துடன் வீதியுலா  நடந்தது. ஊர்வலம் கோவிலை அடைந்ததும் மூலவருக்கு நண்பகல் 12:00 மணிக்கு, பால்  அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (30ம் தேதி) இரவு திருப்பூநுõல் கல்யாணமும், நாளை காலை 10 மணிக்கு  தேரோட்டமும் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சகுந்தலா அம்மாள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !