உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெற்கு நோக்கிய குபேரன்!

தெற்கு நோக்கிய குபேரன்!

குபேர திசை என்றாலே வடக்கு தான். ஆனால், தெற்கு நோக்கிய குபேரலட்சுமி தமிழகத்தில் மகாலட்சுமி விழுப்புரம் திருநகரில் அருள்பாலிக்கிறாள். தாமரை மலர் ஏந்தி, பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். குபேரன் தனது துணைவி சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தகைய கோலத்தில் அருள்பாலிக்கும் குபேரனை வழிபட்டால் தடைபட்ட செயல்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.பிரகாரத்தில் தும்பிக்கையாழ்வார், அஷ்டலட்சுமி, கருடாழ்வார், சீனிவாசப்பெருமாள், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் அருள்கின்றனர். பள்ளியறையில் உற்சவ மகாலட்சுமி ஊஞ்சலில் இருக்கிறாள். கோபுரத்தில் குபேர லட்சுமியின் வாகனமான குதிரை, முதலை உள்ளது. பவுர்ணமியன்று மகாலட்சுமி ஹோமம், பூச நட்சத்திரத்தன்று குபேர பூஜை நடக்கிறது. திறக்கும் நேரம்: காலை 6.30 - 10.30 மணி, மாலை 5.30 - 8.30 மணி.அலைபேசி: 98843 27379, 97517 99423.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !