பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு என்ன?
ADDED :3916 days ago
நம்மிடமுள்ள குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடும் நேரமே பிரதோஷ காலம். இக்காலத்தில் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சுவாமி நடனம் ஆடுவார். அப் போது சிவனை தரிசித்து செய்த தவறைப் பொறுத்தருள வேண்டினால் நிச்சயம் அருள் புரிவார். பாவ மன்னிப்பு வழங்குகின்ற அற்புத நேரமே பிரதோஷம்.